Posts

Showing posts from November, 2021

எலி - யோகாம்பிகை இளமுருகன்

  CLUBHOUSE-இல் வாசிக்கப்படவிருக்கும் சிறுகதை (24.11.2021) நான்கு திசைகளிலும் பொத்துக் கொண்டு வந்தது அந்தச் சத்தம். ஒரே ஒரு மங்கிய குண்டு பல்பின் சத்தம் சிறுவயது முதலே பழகிப்போன தாலாட்டுப் போல் அமைந்திருந்தது. மூன்று கால் காற்றாடியின் எண்ணெய் ஊற்றாது கரைப்பிடித்துக் கிடந்த வயர்களின் அசைவு சத்தம் கீச் கீச்சென கிழித்தது நெஞ்சை. பல நாள் அக்காற்றாடியுடன் போராடியும் அச்சத்தம் நிற்கவில்லை; வயர்கள் அறுந்து மிச்சம் மீதி இருந்த தெம்பினால் ஈடுக்கொடுத்துச் சுழன்றுக் கொண்டிருந்தது. கடிகார முட்களின் 'டக் டக் சத்தம்'. ‘கீச் கீச்’ எலிகலின் விடாத சத்தம். அதுவும் சில காலமாய்ப் பழக்கப்பட்டுப் போனது. பக்கத்து வீட்டின் நாயின் சத்தம். சன்னலுக்கு அருகில் கூடு கட்டியிருந்த சிட்டுக் குருவிகளின் சத்தம். இளசுகளின் மோட்டார் வண்டியின் உறுமல் சத்தம். இம்சை தரும் இவர்களும் எலிக்கூட்டத்தின் ஒரு சில்லுகளே! இதை விடக் கொடுமை எந்நேரமும் பக்கத்து அபார்ட்மெண்டில் வீடு கட்டும் பணியில் எழும்பும் இடியைப் போன்று நெஞ்சை அதிரவைக்கும் பெருஞ்சத்தம். எல்லா சத்தங்களும் கூடி காதுகளில் ஊடுருவி மூளையின் நரம்பிற்குச் சூடாய் வலி

அழியாச் சுவடு - மனோகர ராஜ் மாணிக்கம்

   CLUBHOUSE-இல் வாசிக்கப்படவிருக்கும் சிறுகதை (17.11.2021) வீட்டிலிருக்கும் மேசையை நோக்கி அகீரா வேகமாகக் குரைக்கின்றது. வீடே பார்ப்பதற்கு நேர்த்தியாகவும் குறைந்த பொருட்களையும் மட்டுமே கொண்டிருக்கின்றது. சுற்றிலும் மரங்களும் செடிகளும் வீட்டைச் சூழ்ந்துள்ளன. நகர்புறத்தில் காண இயலாதப் மரப் பலகையால் கட்டப்பட்ட பசுமையானதொரு வீடு இது. இந்த வீட்டை ஏஞ்சலாவின் தாத்தாவே சுயமாக வடிவமைத்துள்ளார். ஏஞ்சலா தன்னுடைய வீட்டில் அதிகமான பொருள்களை வாங்கி வைத்துக் கொள்வதை விரும்பமாட்டாள். குறைவான பொருட்கள், நேர்த்தியான இடம், நிசப்தம் தரும் சூழல், அகீரா ஓடி ஆடி விளையாடுவதற்கான பரந்த விரிந்த இடம் ஆகியனவே இவளின் மாளிகை. நகர்புறத்தில் பல பெரிய வீடுகள் இருந்தாலும் இந்த வீட்டின் சாயல் மட்டும் பழைய சுவடுகளை நினைவூட்டும் தன்மைகளைத் தாங்கி நிற்கின்றது. வீட்டைச் சுற்றி வேலியாக நிற்கும் இரப்பர் மரங்களின் அசைவில் துளிர்விடும் மென்குளிர் காற்று மூடியிருக்கும் வீட்டின் ஜன்னல் சந்துகளில் ஊடுருவிச் செல்கின்றது. அதன் அருகே ஜப்பான் ஆதிக்கத்தின் போது கட்டப்பட்டச் சிறிய கிணறு. கட்டப்பட்ட கிணற்றில் இருக்கும் கண்ணாடிப் போன்ற ந

வீரபாண்டிய கட்டபொம்மன் - உமாதேவி வீராசாமி

  CLUBHOUSE-இல் வாசிக்கப்படவிருக்கும் சிறுகதை (10.11.2021)  உற்சாகத்தின் எல்லையைக் எட்டிப் பிடித்துக் கொண்டிருந்தது என் பள்ளி. கூடுதலான அலங்காரங்களோடு கம்பீரமாய்க் காட்சியளித்த பள்ளிக்குச் சுற்றிப்போட வேண்டுமென மனம் குழந்தைத்தனமாய் எண்ணியது. மாணவர்களின்   ஆரவாரத்தைச் சொல்லவா வேண்டும். ஆர்ப்பாட்டமாய் அங்கும் இங்கும் ஓடிக் குதூகலித்துக்கொண்டிருந்த அவர்களைப் பார்த்ததும் என் மனதிலும் மகிழ்ச்சி தொற்றிக்கொண்டது. பள்ளி வளாகத்தில் ஆங்காங்கே குழுமி நின்று , கதை பேசிக்கொண்டிருந்த பெற்றோர்களின் ஆவலையும் அளவிட்டுச் சொல்ல முடியவில்லை. அவர்கள் முகத்திலே பேரானந்ததிற்கான அறிகுறிகள் அப்பட்டமாய் ஒட்டிக்கொண்டிருந்தன. எதிர்பார்ப்புகளும் எக்கச்சக்கமாய்த் தெரியவே செய்தன. தங்கள் பிள்ளைகளின் திறமைகளைக்   கண்டு களிக்கும் வாய்ப்பு வருடத்திற்கு ஒரு முறைதானே கிடைக்கிறது. எனக்குள்ளும் பட்டாப்பூச்சிகள் பறந்துகொண்டுதான் இருக்கின்றன . என் கால்கள் தரையில் நிற்க மறுப்பதை என்னால் உணர முடிந்தது. எத்தனை நாள் உழைப்பு இது. செந்தமிழ் விழா என்றாலே வருடந்தோறும் இப்படித்தான் இருக்கும் என்றாலும் அனைவரது ஆர்வமும் ஆரவாரமும் குற