Posts

Showing posts from December, 2021

குறியீடு - திவ்யா சுப்ரமணியம்

அனைத்துலகச் சிறுவர் சிறுகதைப் போட்டியில் முதல் நிலையில் வெற்றிப் பெற்ற கதை - 22.12.2021 “ டேய் எவ்வளவு நேரமா கேள்வி கேட்குறேன் . பதில் சொல்லாம கனவு காணுறீயா என்ன ? டேய் … ”, என்று உரக்க கத்திக் கொண்டு இருந்தார் புதிதாக வந்த காட்சி கலை கல்வி ஆசிரியர் . எதையும் காதில் வாங்கி கொள்ளாமல் கண்ணன் மேசையின் மீது தலை சாய்த்துப் படுத்திருந்தான் . இறுதி வரிசையில் அமர்ந்திருந்ததால் அவனுக்குச் சரியாக விளங்கவில்லையோ என்று எண்ணிய ஆசிரியர் அவனை நோக்கி நடந்து வந்தார் . மற்ற மாணவர்கள் சிரித்துக் கொண்டு இருக்கும் சத்தத்தில் கண்ணன் கண் விழித்தான் . ஆசிரியர் அவனை நெறுங்கி வந்து அவனுடைய சட்டையிலிருந்த பெயர் அட்டையைப் பார்த்தார் . அவனும் அவரைப் பார்த்தான் . “ ஓ நீ தான் கண்ணனா ? சரி சரி ”, என்று கூறிவிட்டு நகர்ந்தார் . இதற்கு முன் பாடம் போதித்த காட்சி கலை ஆசிரியர் கொடுத்த வீட்டுப்படத்தை மாணவர்களிடமிருந்து வாங்கி கொண்டிருந்தார் . எப்பொழுதும் போல செழியன் வீட்டுப் பாடத்தைச் செய்யவில்லை . வண்ணம் தீட்டாத தன்னுடைய ஓவியத்தை புத்தகப் பையிலிருந்து எடுக்க பயந்தான் . இந்த வாரமும் ஆசிரியர் வரமாட்டார் ; தப்பித்துவிடலாம் என

சமம் - சுமத்ரா அபிமன்னன்

  அனைத்துலகச் சிறுவர் சிறுகதைப் போட்டியில் இரண்டாவது நிலையில் வெற்றிப் பெற்ற கதை - 15.12.2021 கட்டிலிருந்து இறங்கி கால்களைத் தரை மீது வைத்ததும்தான் கால்கள் வழுவிழந்து இருப்பதை உணர்ந்தேன். எத்தனை நாட்களை இப்படியே களித்தேன் என்று தெரியவில்லை. அப்பா வந்ததும் தான் கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே சற்று தாவி மீண்டும் கட்டிலில் உட்கார்ந்து கால்களைத் தொங்கவிட்டேன். தாதியர்கள் மிக மும்முரமாக தங்கள் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். வேளை தவறாமல் மருந்தும், உணவும் கொடுத்து எந்த பலனும் எதிர்ப்பார்க்காமல் நோயாளிகளைக் குணப்படுத்த மட்டுமே பம்பரமாக சுழன்று கொண்டிருக்கும் தாதியர்களைப் போற்ற வேண்டும் என்று ஆசிரியை அடிக்கடி பள்ளியில் நினைவுறுத்தியதை நினைவு கூர்ந்தேன். மருத்துவமனையில் நோயாளிக அனுமதிக்கப்பட்ட பின் தான் ஆசிரியரின் வார்த்தையில் மறைந்துள்ள உண்மையை உணர முடிந்தது. “கிளம்பலாமா குமாரு” மருத்துவ செலவைத் தொகையைக் கட்டிவர சென்ற அப்பா. உடல் மட்டுமின்றி மனமும் சோர்ந்திருந்தது. ஆனால் மனத்தில் எங்கோ ஒரு மூலையில் நம்பிக்கை மட்டும் விடாமல் என்னை நகர்த்தி கொண்டிருந்தது. “உண்மையாகவே நான் இன்னும் பா

செல்ல மகள்: ர.ரமேஷ் திருப்பூர்

அனைத்துலகச் சிறுவர் சிறுகதைப் போட்டியில் மூன்றாவது நிலையில் வெற்றிப் பெற்ற கதை - 8.12.2021 யப்பா யப்பா எங்க பள்ளிக்கூடத்துல எல்லாரையும் ஒரு வாரம் கழித்து சுற்றுலா கூட்டிட்டு போறாங்கப்பா ஒரு வாரம் சுற்றுலாவாமாம்ப்பா நானும் போகவாப்பா என்று கூறிக் கொண்டே தனது புத்தகப் பையை தூக்கி வீசிய படி ஓடி வந்தாள் செல்ல மகள் அருந்ததி.... அருந்ததி குக்கிராமத்தில் வாழும் ஏழை விவசாயின் முருகனின் மகள் தவமிருந்து பெற்ற மகள். அவளின் தந்தையோ விவசாயி அவரின் வருமானம் அன்றாடம் உணவிற்க்கும் செலவுக்குமே சரியாக இருக்கும்... அவளின் அம்மா கலாமணி தன் பங்கிற்க்கு கிடைக்கும் சின்ன சின்ன வேலைகள் செய்தும் குடும்பத்தையும் கவனித்து வந்தாள்... என்னடி பைய இப்படி வீசிட்டு போறவ என்று கேட்க காதில் விழாதது போல் சென்றாள் அருந்ததி... யப்பா பள்ளிக்கூடத்துல சுற்றுலா கூட்டிப் போறாங்கப்பா நானும் போகவா என்று குழந்தை போல அப்பாவிடம் கேட்க... வீட்டிற்க்கு ஒரே மகள் செல்ல மகள் என்பதால் அப்பாவும் சுற்றுலா செல்ல எவ்வளவு ரூவா ஆகும் என்று கேட்க மகளோ ஆயிரம் ரூவா ஆகும்ப்பா என்று பிஞ்சு முகத்தில் புன்னகையுடன் கூறினாள்..முருகனோ சிறிது நேரம் யோசித்த

இரண்டாவது வகுப்பின் சவால் - குகனேஸ்வரி கோவிந்தசாமி

  CLUBHOUSE-இல் வாசிக்கப்படவிருக்கும் சிறுகதை (1.12.2021) "ஐயோ அம்மா!", என கதறிய​ சம்பவம் இன்னும் எனது கண் எதிரிலே சர்ரு சர்ருன்னு அங்குட்டும் இங்குட்டும் ஓடி இதயமே வெடிக்கப் போவது போல் உணர்ந்தேன். மஞ்சள் நிற​ பஸ் அதிகமாக புகை​ விட்டு சென்றது. வகுப்பில் காலையில் நடந்த​ சம்பவங்களைப் பஸ்ஸின் கண்ணாடி ஓரத்தில் புத்தகப்பையை மடியில் வைத்தவாறு பள்ளிப் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தேன். இன்று பள்ளியில் நடந்த​ இச்சம்பவம் எக்காரணத்தைக் கொண்டும் அம்மாவுக்கு மட்டும் கடுகளவும் கசிந்து விடக்கூடாது என்பதில் நான் மிகவும் கவனமாக இருந்தேன். எங்களது பள்ளிப்பேருந்தின் 'இன்ஜின்' கொடுக்கிற​ சத்தத்தை விட​ என்னுடன் ஒன்றாக பேருந்தில் பயணிக்கின்ற மற்ற இதர​ மாணவர்களின் கூச்சலும் கூத்தும் கும்மாளமும் எனது சிந்தனையை சிதர​ வைத்தது.       ஒத்தையடிப் பாதையில் சாயங்காலம் பள்ளியில் படித்து முடித்து விட்டு வீட்டுக்கு என்றாவது ஒரு நாள் சீக்கிரமாக சென்று 'பவர் ரெந்ஜர்ஸ்' அத்தியாங்களை 'டிவி' இரண்டில் பார்த்து விடலாம் என்ற​ படப் படப்பு ஒருபுறம், 'அல்ட்ராமேன்' பாக்க​ முடியாமல் ப