Posts

Showing posts from February, 2022

கடந்த நதியின் கரையாத கரைகள் - லீனா தர்ஷனா ராமன்

கரும்பலகை புதுக்கவிதை 12: 23.2.2022 நீந்திடும் நிலவினில் நிம்மதியின் நிழல் ...!   நிஜத்தில் நிலத்தினில் சிந்தும் கண்ணீர் ...!   படைத்தவன் அறிந்திடா பகைவனின் சூழ்ச்சியோ ...!   அல்ல படைத்தவன் ஆடும் பந்தயம் இதுவோ ...!   விரல் சொடுக்கும் நொடியில் காட்சிகள் மாறின ...!   விதியின் விளையாட்டில் வாழ்க்கை வானவில் வெளுத்தன ...!   ஓடி ஓடி கடிகாரமுள்ளும் களைத்தது ...!   ஆடி பாடிய நாட்களுக்கும் மறைந்தது ...!   நான்கு சுவருக்குள் நாளும் நான் களித்தேன் ...!   தனிமைக்குத் துணைபோகத் தனிமரமானேன் ...!   கொண்டுவந்த கொள்கையெல்லாம் குற்றவாளியானது ...!   கோரணி   சிறையில் கைதியாக்கப்பட்டது ...!   கடந்த நதியின் கரையாத கரையாய் கரைய எண்ணிக் காத்திருக்கிறேன் ...!  

கடந்த நதியின் கரையாத கரைகள் - திவ்யாதர்ஷினி த/பெ கண்ணன்

    கரும்பலகை புதுக்கவிதை 11: 23.2.2022 அகிலத்தை வியாபித்திருக்கும் அரக்கன் இவனோ மனிதர்ளை அடக்கி ஆளும் அரசன் இவனோ!   ஓர் ஊரை மட்டும் இல்லாது   உலகையே உலுக்கும் ஆபத்து உன் உயிரை நீயே கொஞ்சம் காப்பாத்து!   உயிர்கள் மடிந்து உறவுகள் மறந்து உலகமே இருளானது ஒரு வருடம் இவ்வாறே வீட்டில் கழிந்தது !   பள்ளி மாணவர்கள் வீட்டிலே முடங்கிட ஒன்லைன் வகுப்பில் ஆழமாக மூழ்கிட !     இயற்கையின் சீற்றமா மனிதரின் சூழ்ச்சியா விஞ்ஞானத்தின் வளர்ச்சியா கடவுள் தரும் பயிற்சியா கர்ம வினையின் சுழற்சியா விடைத் தெரியா கேள்விகள் பயந்துத் திடுக்கிடும் மரண நொடிகள்!   முகக் கவரி கைத்தூய்மி அன்றாடத் தேவையானது இதுவே நாளடைவில் பழகிப்போனதே !   இன்பம் இல்லா வாழ்க்கை என்றும் துன்பம் இது எப்போது தீரும் என்றும் ஏங்கும் மனிதக் கூட்டம் !   கடந்த கோவிட்   எனும் நதியின் கரையாத கரைகள் இன்றும் நீண்டு கொண்டே இருக்கின்றன இதிலிருந்து விடுதலையை எண்ணி ஏங்குது உள்ளம் புது விடியலைக் காணத் துடிக்குதுக் கொஞ்சம் !

கடந்த நதியின் கரையாத கரைகள் - கார்த்திகை சுப்பிரமணியம்

   கரும்பலகை புதுக்கவிதை 10: 23.2.2022 ஆறொன்று பெருக்கெடுத்து - இந்த குவலயத்தை விழுங்கியது...   ஆறறிவெல்லாம் கூட்டில் அடங்க மற்றுயிரெல்லாம் உலா சென்றது...   காலன் வீசிய வலையிலே பாதி மீன்கள் பஞ்சத்திலே மீதி மீன்கள் கட்டிலிலே...   கரை ஒதுங்கிய வேளையிலே பிம்பம் கூட காணலையே...   ஓடிக் கிடந்த கால்கள் வீட்டுக்குள் ஓய்ந்திருக்க பாரம்பரியம் எட்டிப் பார்த்தது வேப்பமரம் மொட்டையானது... வேதனையிலும் சில வேடிக்கைகள் பொன்மிகளின் நாடகங்கள்...   உறவுகளின் சங்கமங்கள் ஏக்கங்களின் பதிவேடுகள்…   ஏட்டில் கிட்டா பாடமிது அனுபவம் கொடுத்த கல்வியிது…   சப்பான் காலத்தின் ஏட்டுகளைப் பாட்டிச் சொல்ல கேட்டிருந்தோம்…   இனி நாம் வந்த பாதைகளை ஓதிக் கிடக்கக் காத்திருப்போம்…   போகும் தூரம் எதுவரையோ? வாழும் காலம் அதுவரையில்…   கரை மோதும் அலையையும் மிஞ்சும் இந்த கடந்த நதியின் கரையாத கரைகள்.

தூது - தனேஷ்வரி சதாசிவன்

  கரும்பலகை புதுக்கவிதை 9: 16.2.2022 அப்பா சட்டைப்பையில் அமரமறுத்தவள்... நாணத்தில் நனைந்தாள்  நீலமாக உன்மடல் எழுதிய  என்பேனா..! உடன் வந்தால் மாட்டேன்  என்பேனா..? என்றது நவநீதனின் நிலவும் நட்பற்ற நண்பனாய்.. தப்பில்லாமல்-என் தாபங்களை-உன்  தகப்பனிடம் தப்பவைக்கும்-இந்தத் தபால்க்காரனும்..! உன் தூதுக்கு... திணைகளிலே தொலைந்ததா என்ன?

தூது - திவ்வியா பன்னிர்செல்வம்

   கரும்பலகை புதுக்கவிதை 8: 16.2.2022 விட்டேன் ..., விட்டேன் ..., தூக்கத்தை விட்டேன் துக்கத்தை விட்டேன் பசியை விட்டேன் கண்ணீர் விட்டேன் பின்பற்றாரில்லை ... என் கனவை நிலைநாட்ட இறுதியாகத் தூதுவிட்டேன் ...!   வெறும் தண்ணீரால் மூட்டைக்கட்டிய மூடநம்பிக்கையை மூழ்கடிக்க ஆழிப்பேரலையைத் தூதுவிட்டேன் ...!   நாட்டின் விதையை வெறும் ஏட்டில் எழுதி வைத்தேன் ... அதை மானிடன் உணரச் செய்ய வறுமையைத் தூதுவிட்டேன் ...!   வண்ண வானவில்லின் அழகை ரசிக்க தெரியா கழுதையொன்று வர்ணத்தைப் பிரிக்கையில் ..., அதன் கண்கெட்டுப் போக இருளினைத் தூதுவிட்டேன் ...!   மோதி மிதித்து , முகத்தில் உமிழு என்றேன் அமிலம் எறிவான் என்றரியாது ..., அவன் என்ற ஆணவம் அழிய நீதி தேவதையைத் தூதுவிட்டேன் ...!   பச்சை கிளியின் கூண்டைத் திறந்துவிட்டேன் சிறகடித்து பறக்காது யான் உரைத்த பெண்ணியம் அறியாது சீர்கேட்டில் சிக்கியது ..., அதன் ஆழத்தை உணர என் கவிகளைத் தூதுவிட்டேன் ...!   கொஞ்சும் தமிழ் அழகை

தூது - மீரா சீனிவாசன்

  கரும்பலகை புதுக்கவிதை 7: 16.2.2022 செந்நிற வானம் சொல்லவில்லை கரு நிற கடலும் காட்டவில்லை வெண்ணிற தென்றலும் வேர்க்கவில்லை என்னிறக் காதலை எண்ணவில்லை   அந்தி நேரம் அரவணைக்க தனிமையில் தவிக்கும் மனம்   சொல்ல மறந்தேன் பொழியும் எங்கவியை   மீண்டும் விடியும் இன்னொரு காலை ...   இனி சிறகுகள் தேவையில்லை சேர்க்கிறேன் எம்மெய் விழிகளையே தூதாக ..

செங்கதிரோன் - லோகேந்தினி சுப்ரமணியம்

  கரும்பலகை புதுக்கவிதை 6: 9.2.2022 பச்சையுடுத்திய வயல்வெளிகள் , இச்சைப் படர்ந்த வடிகால்கள் , நிறைமாத நெற்கதிர்கள் , நிறங்கள் ஒளிரும் தும்பியினம் , கொஞ்சல் மொழியில் பயிர்கள் சிரிக்க , நெஞ்சில் வியர்வை மணமணக்க , விவசாயி வீட்டு மழலைகள் போல் விடியலை இரசித்தான் செங்கதிரோன் !

மழைக் காரிகை - யோகாம்பிகை இளமுருகன்

கரும்பலகை புதுக்கவிதை 5: 9.2.2022 கருமேகங்கள் சூழ இடிமுழங்க மின்னல் வீசி மழைக்காரிகை பூமிக்கிறங்கி வருகிறாள்!   இரு கரங்கள் நீட்டி விரித்த குடையை விலக்கி ஆனந்தத்தில் திளைத்து மழை தேவதையை வரவேற்க ஆவலாக முன் தோன்றினாள் பெண் தேவதை…   வா என்று சொல்லும் முன்னரே வருபவளை வரவேற்று ஆராதிக்காமல் சன்னலின் ஓரத்திலிருந்து இரசிப்பதில் அர்த்தம் இல்லை

பொங்கல் - ஜீவனேஸ்வரி கன்னியப்பன்

  கரும்பலகை புதுக்கவிதை 4: 9.2.2022 உதிரத்தை உறமாக்கி... உலக மக்கள் நலம் காக்க...   ஓயாமல் ஓடி                                                     உழைக்கும்   உழவ குலமே...   களிப்புடன் கொண்டாடும் பாரம்பரிய திருவிழா...   மார்கழி வழிவிட தை முதல் பிறந்திட...   வளங்களை சேர்த்திடும் பயன் தரும் பெருவிழா...   உறவினர் கூடி உறவு செய்தி பாடி மனமகிழும் நன்னாளே...   புத்தாண்டை வரவேற்க புத்தாடை அணிந்தே...   மத்தாப்பாய் மகிழும் மனங்கள் கூடி...   தித்திப்பு திருநாளில் தெருவெல்லாம் திருக்கோலம்...   இன்பம் சூழ முழங்கிடுவோம் பொங்கலோ பொங்கல்...

பார் அதிரும் தீ..பாரதி - லீனா தர்ஷனா ராமன்

  கரும்பலகை புதுக்கவிதை 3: 2.2.2022 பார் அதிர்ந்தது பார் ...!   பெண்ணடிமை விரட்டியவனின் பெருமையைப் பெண்ணிவள் எழுதுகிறேன் பார் ...!   மொத்த விடியலும் யுத்த கவிதையில் ரத்த வரிகளில் வாழ்ந்தவனைப்   பார் ...!   சாதி குளத்தில் விழுந்த கூட்டத்தில் நனையாமல் விரிந்த செந்தாமரையைப் பார் ...!   தாய்த் தமிழில் தேன் துளிகளில் தீர்த்தம் தெளித்தவனைப் பார் ...!   இசை மழையில் இதம் தரிக்க இதிகாசங்களை இணைத்தவனைப் பார் ...!   போட்டிக் களத்திலும் போற்றும் அளவில் பெயர் பதித்து சென்றவனைப் பார் ...!   பார் அதிரும் தீ ... பாரதியைப் பார் ...!   இத்தனையும் பாராவிடில் பார்வை உற்றதில் என்ன லாபம் ? நீ பாரில் வாழ்வதுதான் பெறும் சாபம் ...!