Posts

Showing posts from January, 2022

எதிர்பார்ப்பு - திவ்யாஸ்ரீ இரகு

பூச்சோங் தமிழ் வாசகர் எழுத்தாளார் சங்க ஏற்பாட்டில் நடைபெற்ற ஒரு பக்கக்கதை (குறுங்கதை) போட்டியில் முதல் நிலையில் வெற்றிப்பெற்ற ஒரு பக்கக்கதை. இரண்டு நாட்களாய் வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட சுந்தரேசன் இன்றுதான் வீட்டில் இருக்கிறான். ஆனால் , காரணமே இல்லாமல் காலையிலேயே வரவேற்பறைக்கும் வாசலுக்கும் நடை போட்டுக்கொண்டிருந்தான். காரணம் புரியாமல் அவன் மனைவி சுந்தரி தலையைப் பிய்த்துக்கொண்டிருந்தாள் . பொறுமையிழந்தவள் காரணத்தைக் கணவனிடமே கேட்டுவிட்டாள். எதிர்பார்த்த பதில் வரவில்லை.  சோபாவில் போய் அவசரமாய் உட்கார்ந்து கொண்டான் சுந்தரேசன். முகத்தில் ஏதோ  எதிர்பார்ப்பு. அதைக் கவனிக்கத் தவறவில்லை சுந்தரி. பத்து நிமிடங்கள்கூட கடந்திருக்காது. சுந்தரேசன் அடித்துப் பிடித்துக்கொண்டு வாசலை நோக்கி ஓடினான். வீட்டின் முன்னே சுந்தரேசனின் நண்பன் கோபால் தன் ஹோண்டா செவண்டி மோட்டாரில் தரிசனம் தந்தான்.  சுந்தரேசன்  ஆர்வமாய் ஏதோ கேட்க , இல்லை என்பதற்கு அடையாளமாய்த் தலையை ஆட்டினான் கோபால். கோபால்  விடைபெற்றுக்கொள்ள ,   சுந்தரசேன் குனிந்த தலை நிமிராமல் உள்ளே வந்தான். அவன் நடையில் தளர்ச்சி.  “என்னங்க..! ஏன் ? என்ன ஆச

சகதி - AK ரமேஷ்

பூச்சோங் தமிழ் வாசகர் எழுத்தாளார் சங்க ஏற்பாட்டில் நடைபெற்ற ஒரு பக்கக்கதை (குறுங்கதை) போட்டியில் இரண்டாம் நிலையில் வெற்றிப்பெற்ற ஒரு பக்கக்கதை. உள்ளம் முழுவதும் ஒரு வகையான திருப்தி. உள்ளுக்குள்ளே ஏதோ ஒரு பெருமிதம். கடந்த இரு நாட்களாகச் சமூக ஊடகங்களில் கண்ட காட்சிக ளினூடே நிஜமாகவே நடந்து போகிறேன். காலை முதல் , மூன்று வீடுகளைச் சுத்தப்படுத்தினோம். ஸ்ரீ மூடாவில் வெள்ளத்தினால் வீட்டுடைமைகளை இழந்தவர்க ளுக்கு எங்க ளி ன் உதவிக்கரம் மிகப்பெரிய ஆறுதலைத் தந்தது. ஜெகாவுக்கும் அவரது தொண்டூழிய இளைஞர்களுக்கும் அது பழகிப் போன விஷயம் தான். எனக்கு முதல் அனுபவம். நான்காவது வீடு மற்ற வீடுகளைப் போல் இல்லை. முழுக்க நாங்களே சுத்தம் செய்ய வேண்டிய நிலையில் இருந்தது. இரண்டு நாட்களாக எதுவுமே செய்யவில்லையா ? முழு வேலையையும் தொண்டூழியர்கள் தலையில் கட்டுவதா ? மனதில் சின்ன கோபம் . அதிகமான சேறு ,   தாங்க முடியாத துர்நாற்றம். குமட்டிக் கொண்டு வந்தது . அந்த வீட்டு அம்மா சிலையாய் விட்டத்தையே பார்த்துக்கொ ண் டி ருந்தார். நடுத்தர வயது. தோய்ந்த முகம். எல்லா உடைமைகளையும் பறிகொடுத்த வேதனை போலும். அதற்கு ? இப்படியா

திறந்திடு சீசே! - விக்கினேசுவரன் பார்த்திபன்

பூச்சோங் தமிழ் வாசகர் எழுத்தாளார் சங்க ஏற்பாட்டில் நடைபெற்ற ஒரு பக்கக்கதை (குறுங்கதை) போட்டியில் ஊக்க நிலையில் வெற்றிப்பெற்ற ஒரு பக்கக்கதை. இந்த ஒரு நாளுக்காக அவள் காத்திருந்த காலம் மிக நீளமானது. ' அடியே! என் சொத்தே அதுல தான் டீ இருக்கு , நான் செத்தோனே உனக்கு தான் அது... ' எனப் பாட்டி அவளுக்கு நினைவுப்படுத்தாத நாளே இல்லை. அன்றாடம் கனவிலும் கற்பனையிலும் அவள் கண்டு வாழ்ந்ததெல்லாம் இன்று நிறைவேற போவதென்றால் யாருக்குத் தான் மனம் நெகிழாமல் இருக்கும் ? பாட்டியை அடக்கம் செய்து இரண்டு மணி நேரமே ஆகிறது. இதற்கிடையில் எப்படி அந்தக் கதவைத் திறப்பது. ஒரே குழப்பம். சுற்றி உற்றுநோக்கினாள். உறவினர்கள் ஈக்களாய் மொய்த்துக் கொண்டிருந்தனர். கூட்டமாக இருக்கும் போதே கதவைத் திறந்து விட்டால் நல்லது. இல்லையெனில் அனைவரும் பங்குக்கு நிற்பார்கள். ஆழ்மனத்தில் திட்டம் வரைந்துக் கொண்டாள். அந்தக் கதவு தேக்கு மரத்தால் ஆனது. தாத்தா தஞ்சாவூரிலிருந்து செதுக்கி வாங்கினார். அதனைத் திறப்பதற்கு விசேட கருவிகள் தேவைப்படுமோ என மனம் ஒரு பக்கம் கலங்க வைத்தது. இன்று எப்படியாவது கதவைத் திறந்தாக வேண்டும். அவள் இயல்பா

வெட்டி முறிக்கல - பத்மநாதன் பரசுராமன்

  பூச்சோங் தமிழ் வாசகர் எழுத்தாளார் சங்க ஏற்பாட்டில் நடைபெற்ற ஒரு பக்கக்கதை (குறுங்கதை) போட்டியில் ஊக்க நிலையில் வெற்றிப்பெற்ற ஒரு பக்கக்கதை. “ நீயெல்லாம் இருந்து என்ன ஆகப்போகிறது.. ஒரு வேலைக்கும் லாயக்கில்லாமல் இருப்பதைவிட ஒழிந்து தொலை!” என்று ஆவேசமாகத் திட்டிவிட்டு , அலுவலகத்துக்குச் சென்று விட்டார் கணவர். இத்தனைக்கும் இருவரும் காதலித்துத் திருமணம் புரிந்தவர்கள். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்லக் கூடியவர்கள்தான். கணவனின் மனக்குழப்பம் அப்படிப் பேசவைத்துவிட்டது.மாலையில் வீடு திரும்பியபோது  வீட்டுக் கதவு ‘ஆ’வென திறந்து கிடந்தது.திகைப்போடு வீட்டுக்குள் நுழைந்தால் , களேபரம் நிகழ்ந்ததற்கான அறிகுறிகள் தென்பட்டன. தொலைக்காட்சியில் கார்ட்டூன் நிகழ்ச்சி சத்தமாக அலறிக் கொண்டிருந்தது.அறை முழுவதிலும் விளையாட்டு பொம்மைகளும் பல்வேறுபட்ட துணிகளும் சிதறிக் கிடந்தன. மேசையில் காலைச் சிற்றுண்டி சிந்திக் கிடந்தது.குளிர்சாதனப் பெட்டியின் கதவு அகலமாகத் திறந்திருந்தது.வரவேற்பரையை ஒட்டி இருந்த குளியலறையை நோக்கித் திரும்ப , அங்கும் அதிர்ச்சிக் காட்சிகள். உள்ளே தண்ணீர் சொட்டும் சப்தம் , நிசப்தத்தை ம

காலத்தின் பதில்- ரூபிணி அசோகன்

   CLUBHOUSE-இல் வாசிக்கப்படவிருக்கும் சிறுகதை (12.1.2022) “அபாங்..தே தாரேக் சது ,” ஆறு மாதங்களாக அபாங் அமிட்டின் தேநீருக்கு நந்தினி அடிமையாகிவிட்டாள். தமிழ் திரைப்படங்களில் மட்டுமே தெருவோரம் டீக்கடைகளைப் பார்த்தவளுக்கு மலேசியாவில் அதிலும் கெடாவில் இப்படியொரு கடையைக் கண்டது வியப்பாகவே இருந்தது. விளையாட்டுப் பூங்காவின் அருகிலேயே அபாங் அமிட்டின் டீக்கடை. அவருடைய ‘ தே தாரேக்கும் ’ ‘ பீசாங் கோரேங்கும் ’ அங்கு அதிகமான இரசிகர் கூட்டம். விளையாட்டுப் பூங்கா பலரின் மனத்தை அமைதியாக்கி இதமான சூழலை அமைத்துத் தருவதைப் போல அபாங் அமிட்டின் கைவண்ணத்தில் மலர்ந்த தேநீரும் பலகாரங்களும் அவர்களின் வயிற்றுக்கு இதமாக அமையும். ‘ எனக்கு ‘ டீ ’ பிடிக்காது ‘ கோவ்வீ ’ தான் பிடிக்கும் ’ என்று சொல்பவர்கள் கூட ஒரு நாள் அபாங் அமிட்டின் தேநீரை அருந்தினால் வாழ்நாள் கைதியாகிவிடுவார்கள் எனலாம். அபாங் அமிட்டின் வாடிக்கையாளர்களுள் நந்தினியும் அடங்குவாள். தினமும் மாலை ஐந்து மணிக்கு அந்த பூங்காவிற்கு வந்துவிடுவாள் . அங்கு துள்ளி விளையாடும் குழந்தைகளின் மகிழ்ச்சியில் தன்னையே மறந்திருப்பாள். நந்தினியின் சொந்த ஊர் சிலா

மூட்டை - தனேசுவரி கேசவன்

  CLUBHOUSE-இல் வாசிக்கப்படவிருக்கும் சிறுகதை (5.1.2022) மேசையின் மீது இருந்த அரிசி மூட்டையின் மீது பார்வை விழுந்தது. அறைக்குள் நுழையும் முன்னர் அம்மூட்டை அங்கு இல்லை. எங்கிருந்து இந்த மூட்டை வந்திருக்கும் என்ற சிந்தனையில் விடைக்காக மனைவியைத் தேடினேன். அவளின் உருவம் எங்கும் தென்படவில்லை. வீடும் அமைதியாக மட்டுமே இருந்தது. பல கேள்விகளுடன் அறையின் வாசலில் நின்று கொண்டிருந்தவனுக்கு வேலையின் ஞாபகம் அப்பொழுதுதான் வந்தது. அறையை விட்டு வெளிவந்ததன் நோக்கத்தை அப்படியே மறக்கச் செய்தது அரிசி மூட்டை. ஏதும் பேசாது மீண்டும் அறைக்குள் நுழைந்தேன். மடிக்கணினியில் விட்டுச்சென்ற அதே முகங்கள் மீண்டும் தெரிந்து கொண்டிருந்தன. அலுவலகத்தில் உடன் பணிப்புரியும் அகிலன் தனது பணித்திட்டத்தைப் பற்றி இன்னும் படைத்துக் கொண்டிருந்தார். இந்தக் கோரணி நச்சில் காலம் தொடங்கியது முதல் வீட்டிலிருந்து வேலை செய்ய உத்தரவு வழங்கப்பட்டிருந்தது. வேலை இடத்திற்கு நேராக செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றாலும் வேலை தொடங்கும் நேரமும் முடியும் நேரமும் எவ்வித மாற்றமும் இல்லாமல் அப்படியேதான் இருந்தன. அதனால் , வீட்டில் இருந்தாலும் வேலை முட