Posts

கடா – AK ரமேஷ்

  சின்னையாவின் கார் இயந்திரம் திடீரென செயலிழந்தது. சீறிப் பாயும் ஜகுவார் வகை கார் சிணுங்கிக் கொண்டே நின்றது. சாலையின் இரு மருங்கிலும் மண் தரை இருந்ததால் காரைப் பாதுகாப்பாக நிறுத்த ஏதுவாக இருந்தது. நிதானமாக இரு பக்கமும் சமிக்ஞை விளக்கை எறியச் செய்தார். அப்போதுதான் இருட்ட ஆரம்பித்துக் கொண்டிருந்தது. சதுர்தசி திதி முடியும் நேரம் அது. நேர் சாலைதான். பெஸ்தாரி ஜெயாவிலிருந்து ரவாங் செல்லும் பாதை அது. ஸ்ரீ தண்டயுதபாணி ஆலயத்தில் அவசரம் அவசரமாக முருகப் பெருமானைத் தரிசித்து விட்டு இரவு 8.30 மணிக்குள் செராஸில் வீட்டை அடைய திட்டமிட்டிருந்தார் சின்னையா. பெஸ்தாரி ஜெயா சின்னையாவுக்கு அவ்வளவு பழக்கமில்லாத இடம். ஒரே இருட்டு. நீண்ட இடைவெளியில் நிறுவப்பட்டிருந்த சாலை மின்விளக்கின் மெல்லிய ஒளியில் சாலையின் வலது பக்கம் செம்பனை மரங்கள் தெரிந்தன. இடது பக்கம் ஏதோ திறந்த வெளி போல் தெரிந்தது. அங்கு வீடுகள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. ஓரிரு வாகனங்கள் அவரைக் கடந்து சென்றன. என்ன ஆச்சு ? பெட்ரோல் பாதிக்கு மேல இருக்கு. பெட்டரி மாத்தி எவ்வளவு நாள் ஆச்சு ? அவரால் நினைவு கூற முடியவில்லை. சிங்கப்பூரில் வேலை செ

778 - விக்கினேசுவரன் பார்த்திபன்

நூலிழை கதைச்சொல்லி 2.0 நடுவர் தேர்வு சிறுகதை- 23.3.2022 நீண்ட நேரம் தொடர்ந்து அழுது கொண்டிருந்த குழந்தையின் அழுகுரல் சில நிமிடங்களில் பழகிப் போன மெட்டாக அங்கு மாறிப் போயிருந்தது. சுற்றியுள்ள மனிதர்களின் விழிகள் மட்டுமே பளிச்சென்று கண் முன்னே தென்பட்டது. எங்கோ பார்த்த பரிட்சயமான விழிகள், மூக்கு கண்ணாடி அணிந்த விழிகள், முட்டை போன்ற விழிகள், சிறிய விழிகள் எனப் பல ரூபங்களில் மக்கள் அங்கும் இங்குமாய் நடமாடிக்கொண்டிருந்தனர். முகக்கவரியின் வரவு பல விழிகளை ஆழ்ந்து நோக்கிடவும் வாய்ப்புக் கொடுத்திருந்தது. பின்னிருக்கையிலிருந்து வெகு நேரம் வருகின்ற முணங்கல் ஒலி கால்களில் போடபட்டிருந்த மாவுக்கட்டின் பரிதாப ஓசையென இயல்பாக ஒரு முறை திரும்பிப் பார்க்கையில் அறிந்து கொண்டேன். வெளியில் திடிரென்று ஒலிக்கும் அம்புலன்ஸ் வண்டியின் சைரன் ஒலி பதற்றத்தைப் பன்மடங்கு என்னுள் கூட்டியது. வியர்வையில் நச நசவென இருந்த கைகள் இரண்டையும் இறுக்கிப் பிடித்தவாறு எனது இருக்கையில் எதிர்பார்த்து காத்திருந்தேன். எப்பொழுதும் நேர்த்தியாகக் கூந்தலை வாரி சடையிட்டு வருவதற்கான நேர அவகாசம் இன்று வாய்க்கவில்லை. இந்தத் தோற்றத்தை நன