Posts

Showing posts from October, 2021

மணல் மூட்டை - காந்தி முருகன்

  CLUBHOUSE-இல் வாசிக்கப்பட்ட சிறுகதை (8.9.2021) நேரம் நள்ளிரவை நெருங்கிக்   கொண்டிருந்தது.இன்னும் சிறிது நேரத்தில் என் கைகள் கட்டப்பட்டு விடும் . நான் இங்கிருந்து தப்பித்து விடக்கூடாது என்பதற்காகவும் இறுதி நேரத்தில் நான் முரண்டு விடக்கூடாது என்பதற்காகவும் தான் இந்த கைக்கட்டும் வித்தை.இங்கிருந்து நகரக் கூட என் கால்களுக்கு வலிமை கிடையாது.நகர்வதற்கு மனத்திலும் துணிவுமில்லை.ஒரு வேளை என் மனம் மாற்றத்தை எதிர்க்கொண்டு விட்டால் மீண்டும் அந்த நரகத்திற்குள் நுழையவோ , சொல்லடிப்பட்டு வாழவோ நான் மறுப்பிறவி எடுத்துதான் வர வேண்டும் .   ஒவ்வொரு முறையும் என் முரட்டுக் கைகள் அந்தப் பிஞ்சுப் பாதங்களைத் தழுவ நினைக்கும் போதல்லாம் என் உடலெங்கும் அட்டையை விட்டு அவை என் தோலைத் துளைத்துக் கொண்டு சதைகளைத் தின்று பாதியிலேயே விட்டுச் செல்வதைப் போலவே உடல் ரணகளமாகும் . கைகள் தானாகப் பின் வாங்கிக் கொள்ளும் . வெண்மை நிறத்திலான போர்வை அவளது பாதங்களை மறைத்துக் கொள்வது ஒரு அசூசையாக இருப்பதாக உணர்வுகள் தோண்றிக் கொள்வது ஒன்றும் பு